மீதொட்டமுல்ல குப்பை மேடு மீண்டும் சரியும் அபாயம்..!

மீதொட்டமுல்ல குப்பை மேடு மீண்டும் சரியும் அபாயம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அண்மித்த பகுதியில் ‘மேகத் தோட்டம்’ உட்பட 3400 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

ஆனால் இதுவரை அதற்கான பணிகளை மேற்கொள்ள முதலீட்டாளர் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேடு 2017 ஆம் ஆண்டு சட்டவிரோத கழிவுகளை அகற்றியதால் குப்பை மேடானது சரிந்து விழுந்தது. இதன் விளைவாக, பதினொரு பேர் காணாமல் போயினர், மேலும் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தனர். எட்டு ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்த குப்பைக்கிடங்கின் உயரம் 48 மீட்டர் ஆகும்.

இந்த குப்பை மேட்டை உரிய முறையில் பயன்படுத்தாமையால் மீண்டும் சரிந்து விழும் அபாயம் ஏற்படலாம் எனவும் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

ஐந்து மாடிகளாக அமைக்கப்பட்டு அதன் உயரம் 33 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாகவும், குப்பை மேட்டை அபிவிருத்தி செய்து அருங்காட்சியகம், வீட்டுத் தொகுதி உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளதாகவும் அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குப்பை மேட்டில் இதுவரை எந்த ஒரு அபிவிருத்தித் திட்டமும் கடைப்பிடிக்கப்படாததால், அங்கு சூரிய மின்சக்தித் திட்டம் அமுல்படுத்தப்பட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்க முடியும் என கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு முன்மொழிந்துள்ளது.