பலஸ்தீனத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,523 ஆக உயர்வு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 15,523 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் கூறியதாவது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனப் பகுதியில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,000ஐ தாண்டியுள்ளது. காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் மிகக் குறைந்த மருத்துவ வசதிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.