போட்டியை பார்க்க ரசிகர்கள் வராமைக்கான  காரணம் நாட்டில் அதிகமான பிரச்சினைகள் இருப்பதாலே – வனிந்து..!

போட்டியை பார்க்க ரசிகர்கள் வராமைக்கான காரணம் நாட்டில் அதிகமான பிரச்சினைகள் இருப்பதாலே – வனிந்து..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடருக்கு முந்தைய போட்டிகளில் தோல்வியடைந்ததன் காரணமாக பார்வையாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை தாம் நம்பவில்லை என இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகமான பிரச்சினைகள் இருப்பதால் போட்டியை காண மக்கள் வராமல் இருந்திருக்கலாம் என தான் கருதுவதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் பல பிரச்சினைகள் நிலவும் அதேவேளையில் அண்மைக்காலமாக பாராளுமன்றத்தில் கிரிக்கட் தொடர்பில் அதிகளவில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.