நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மாஹிர் ஆதிக் வளர்த்த பூனை அழுது புரண்டதால் நல்லடக்கம் செய்த மையவாடிக்கு எடுத்துச் சென்ற உறவினர்கள்..!

நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மாஹிர் ஆதிக் வளர்த்த பூனை அழுது புரண்டதால் நல்லடக்கம் செய்த மையவாடிக்கு எடுத்துச் சென்ற உறவினர்கள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாசிவன்தீவு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 17 வயதுடைய வாழைச்சேனை மாஹிர் ஆதிக் எனும் இளைஞனின் உடல் நேற்று முன்தினம் (13) வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட நல்லடக்கத்தின்போது, மரணமடைந்த ஆதிக் வளர்த்த பூனையும் கலந்து கொண்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனை தேடி அழுதவாறு திரிந்த பூனை அவரது உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லும்போது அழுது புரண்டுள்ளது.

அதனை அவதானித்த அதீகின் உறவினர்கள் பூனையை ஆறுதல்படுத்த நல்லடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்