பௌத்த தேரர் ஒருவரை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொடங்கஸ்லந்த, உடத்தபொலவில் அமைந்துள்ள விகாரையை இலக்கு வைத்து நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விகாராதிபதி கல்னேவ பன்னகித்தி தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், பன்னகித்தி தேரர் அப்போது விடுதியின் வேறொரு இடத்தில் உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளைப் போல் பாவனை செய்து இனந்தெரியாத நான்கு நபர்களால் பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நாளின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.