அரச பரிசுப்பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டு – இம்ரானிற்கும் மனைவிக்கும் 14 வருட சிறை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானிற்கும் அவரது மனைவி புஸ்ரா பீபிக்கும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் நீதிமன்றம் 14 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
நேற்று மற்றுமொரு வழக்கில் இம்ரான்கானிற்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இம்ரான்கானிற்கும் அவரது மனைவிக்கும் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
அரசாங்காங்கத்திற்கு சொந்தமான பரிசுப்பொருட்களை தங்களது சொத்துக்களாக கருதி விற்பனை செய்தனர் என இம்ரான்கானிற்கும் அவரது மனைவிக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் நாடாளுமன்ற தேர்தல் இன்னமும் ஒரு வாரகாலத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்ரான் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.