ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளும் கட்சி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளும் கட்சி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் கலந்துரையாடல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெறுவதற்கு, கட்சித் தலைமையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.