பாணுக்கு விஷேட வர்த்தமானி வெளியானது – ஒரு இறாத்தல் பாணின் எடை கட்டாயம் 450 கிராம் இருக்க வேண்டும் என உத்தரவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாணின் நிலையான எடையைக் குறிப்பிட்டு விஷேட வர்த்தமானி ஒன்று நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அனுமதிக்கப்பட்ட 13.5 கிராம் வித்தியாசத்துடன் ஒரு பாணின் நிலையான எடை 450 கிராம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரை இறாத்தல் பானின் நிலையான எடை 9 கிராம் வித்தியாசம் அல்லது குறைபாடுடன் 225 கிராம் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விற்பனைக்காகக் காட்டப்படும் பாணின் எடையைக் காட்டுமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.