தரமற்ற அரிசி விநியோகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சஜித் கோரிக்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம். சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹலிலெல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விநியோகிக்கப்பட்ட அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவையென அவர் மேலும் தெரிவித்தார்.