கலர் லைட் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அதன்படிஇ யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.