எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – மினுவாங்கொடையில் 65 இடங்களில் பாதிப்பு..!

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் – மினுவாங்கொடையில் 65 இடங்களில் பாதிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவிலுள்ள 15 கிராமங்களில் எலிக்காய்ச்சல் அபாயம் இருகின்ற 65 இடங்களை தெரிவு செய்வதற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சலுக்கு எதிரான பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய அறிவிப்புப் பலகைகள் நிறுவப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாதேல்கமுவ, நெதகமுவ, பத்தடுவன, நில்பனகொட, ஹொரம் பெல, உடுகம்பொல, மெதகம்பிட்டிய தெவொல பொல, வோகொச்சிய, மாரபொல, யட்டியான, கொரச, வீதியவத்த, அஸ்கிரிய, கல்ஒலுவ ஆகிய பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் இந்த அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 17 பேர் மற்றும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயிரிழந்த இருவரில் ஒருவர் யாகொடமுல்லையில் இருந்து விளைநிலம் வழியாக ஹீனட்டியான வரை நடந்து சென்றவர் எனவும், மற்றையவர் அஸ்கிரி வல்பொல பிரதேசத்தில் உள்ள அத்தனகலு ஓயாவின் கிளை ஒன்றின் இருபுறங்களிலும் விறகு வெட்டச் சென்றவர் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.