இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் நடைபெறாது..!

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் நடைபெறாது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் இந்த தருணத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தவறான கருத்தை நாட்டுக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சி பிரதம அமைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.