எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவே இறுதி அறிவித்தல் – அனுரகுமார..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் உத்தேச விவாதத்திற்கான திகதியை வழங்காவிடின், அவர் விவாதத்தில் இருந்து ஓடியவராகவே கருதப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த விவாதத்திற்கு முன்னதாக இம்மாதம் 7, 9, 13 அல்லது 14 ஆம் திகதிகளை வழங்கியதாகவும், ஆனால் அதற்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும், எனவே இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் 20 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு திகதியையும் தெரிவு செய்ய முடியும் எனவும். அவர் எந்த வேலையாக இருந்தாலும் அந்த திகதியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எனவே எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவே இறுதி அறிவித்தல் எனவும் அன்றைய தினம் அல்லது அதற்கு முன்னதாக வராவிட்டால் கட்சி முன்மொழிந்த பொருளாதாரக் குழுவுடன் விவாதம் நடத்தத் தயார் எனவும் தெரிவித்தார்.