உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல திட்டமா..?

உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல திட்டமா..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொல்ல ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சதியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் உக்ரைன் அரசாங்க பாதுகாப்பு பிரிவின் இரண்டு கட்டளை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் ரஷ்யாவில் முகவர்களாக செயல்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஜெலென்ஸ்கியின் மெய்ப்பாதுகாவலர்களில் அவரைக் கொல்ல விரும்பிய ஒருவரைக் கண்டுபிடிக்க அந்த நபர்கள் ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.