முதல் தடவையாக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா..!

முதல் தடவையாக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேல் பலஸ்தீனின் ரபா பகுதியை தாக்கினால் அல்லது அங்கு குண்டு வீசினால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சி.என்.என் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு பகிரங்கமாக இஸ்ரேலை அமெரிக்க எச்சரித்த முதல் தடவை இது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் ரபா பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பங்களாதேஷ் கொக் பஸார் அகதிகள் முகாமுக்கு அடுத்த மிகப்பெரிய அகதிகள் முகாம் அமைந்துள்ள பகுதியா ரபா பகுதி பார்க்கப்படுகின்றது.