ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.