24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி..!

24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்ந நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அண்மைக்காலமாக அரசாங்கத்தால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றதெனவும், அவை பணத்துக்காக விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.