ரயில்களில் சிவில் உடையில் பொலிஸார்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத நடவடிக்கைகளில் விசேட கடமைகளுக்காக பொலிஸ் சுற்றுலாப் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்காக சிவில் உடையில் 5 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புகையிரத பயணிகளின் சொத்துக்கள் திருடப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.