81 அரச பாடசாலைகள் மூட வேண்டிய நிலை – கல்வி அமைச்சர்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 81 அரச பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் செயற்பட்டவை என்றும், அவற்றின் பௌதீக வளங்களை வேறு பயனுள்ள தேவைகளுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அவ்வாறான ஒரு சில பாடசாலைகள் வேறு கல்வித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
பாராளுமன்றத்தில் நேற்று(10) முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.