தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு காயம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம், அவர் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்த போது அவரது பராசூட்டை திறப்பதில் தாமதம் ஏற்பட்டமையினால், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.