பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வேதன உயர்வு குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லையென தெரிவித்து இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
அந்த வகையில் நாளை முதல் அத்தியாவசிய சேவைகளையும் அவர்கள் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.