விஜயதாசவின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு, துமிந்தகோரிய தடையுத்தரவுக்கு அனுமதி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி அதன் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனு தொடர்பான தடை உத்தரவை பரிசீலிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (15) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நியமனம் தொடர்பில் கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால், மனுதாரர் கோரிய தடை உத்தரவை பிறப்பிக்க முடியாது என விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் நேற்று (14) ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதன்படி, கோரிய தடை உத்தரவு தொடர்பான மேலதிக விடயங்களை முன்வைப்பதற்கு துமிந்த திஸாநாயக்கவின் சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று பிற்பகல் வெளியிடப்படும்.