ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை..!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலஞ்சம், ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு இன்று ஏற்பாடு செய்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகளை அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதையடுத்தே, குறித்த பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில முனசிங்கவிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரத்தை மீள வழங்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.