சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் உயிரிழப்பு..!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இமதுவ, ராஸ்ஸகல ,மாதம்பே மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களிலிருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள 67,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.