மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான தடை உத்தரவை வரும் 12ம் திகதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சட்டப்பூர்வ உரிமை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.