உள்ளூராட்சி தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில்

உள்ளூராட்சி தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“உயர் நீதிமன்றம் உள்ளூராட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த ஆண்டு நடத்துவதற்கான ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடத்தப்படும்.. அதாவது பிரதேச சபை, நகர சபை தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ”