ருஹுனு பல்கலைக்கு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிப்பு

ருஹுனு பல்கலைக்கு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக, அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (24) விசேட வர்த்தமானியை வெளியிட்டு இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

1978 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரிவு 20(4)(அ) சரத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் பாரியளவில் சீர்குலைந்துள்ளதாகவும், அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கு நிறுவன அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டம் அல்லது விதி, ஒழுங்குமுறை, நியதி, சட்டத்தின் கீழ் முறையே பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செயல்படுத்துவதற்கு ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே.ரத்நாயக்க நாளை (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.