ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தம்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து , முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன் , கட்சியை ,கட்சித்தலைவரை பொதுவெளியில் விமர்சித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாடு தொடர்பில் நியாயப்படுத்தும் காரணங்கள் இருப்பின் அதனை விளக்குமாறும் அந்த கடிதத்தில் ஹரீஸிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.