லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.