அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை மறுத்தார் சுஜித்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாம் யாரையும் தாக்கவில்லை என கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுஜித் சஞ்சய் பெரேரா:-
நான் அவரைத் தாக்கியதாக அவர் கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்றார்.
இதன்போது எழுந்த குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார,
யாழ்.மாட்ட சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு வந்து மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டார் என்றார்.