லோஹான் ரத்வத்த மீண்டும் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ரஷி பிரபா ரத்வத்த ஆகியோர் நேற்று(05) பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.