அரிசி ஆலைகளில் இன்று விசேட சோதனை

அரிசி ஆலைகளில் இன்று விசேட சோதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரிசி ஆலைகளில் தினசரி உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, தற்போதை கையிருப்பு மற்றும் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் அரிசியின் அளவு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்கு அரிசி ஆலைகள் இன்று (08) விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய, எதிர்காலத்தில் அனைத்து அரிசி ஆலைகளிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது

COMMENTS

Wordpress (0)