இலங்கை அணிக்கு 348 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கை அணிக்கு 348 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 348 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நான்காவது நாளான இன்று (08) தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ஓட்டங்களை பெற்றது.

அதன்படி, இலங்கை அணியை விட 347 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பில் அணித்தலைவர் Temba Bavuma அதிகபட்சமாக 66 ஓட்டங்களையும், Aiden Markram 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Prabath Jayasuriya 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தற்போது வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 12 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 358 ஓட்டங்களையும் இலங்கை அணி 328 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)