கரையோர புகையிரத சேவையில் தாமதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டைக்கு வரும் புகையிரதங்கள் தாமதமாக இயக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்கிஸை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை வரை இயங்கிய அனைத்து அலுவலக புகையிரதங்களும் தாமதமின்றி இயக்க முடிந்ததாக புகையிரதத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.