உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேனவுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேனவுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்துடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதில் அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் எயார்பஸ் விமானங்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்துவதற்காக இலஞ்சம் பெற்றதாக கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான ஊழல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதவியானது வருடாந்திர ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 7031(c) இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது, அந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

COMMENTS

Wordpress (0)