தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சற்று முன்னர் மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.