சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் துணைத் தலைவி கௌரவ குயின் போயோங் சபாநாயகரைச் சந்தித்தார்

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் துணைத் தலைவி கௌரவ குயின் போயோங் சபாநாயகரைச் சந்தித்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் துணைத் தலைவி கௌரவ குயின் போயோங் சபாநாயகர் கௌரவ (வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்னவை கடந்த
18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
கௌரவ குயின் போயோங் தலைமையிலான தூதுக்குழுவினருக்கு சபாநாயகர் மதிய உணவு
விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால
நட்புறவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இது அமைந்திருந்தது. குறிப்பாக பாராளுமன்ற
ஒத்துழைப்பு, நிலைபேறான அபிவிருத்தி, வர்த்தகம், விவசாயம், தொழில்கள் மற்றும் பலதரப்பு
ஈடுபாடுகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன்
முக்கியத்துவத்தை சபாநாயகர் வலியுறுத்தினார்.
இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளை
வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஆதரவளித்தமைக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் கௌரவ
(வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன இச்சந்திப்பின் போது தெரிவித்தார். இரு நாடுகளுக்கும்
இடையிலான நீடித்த நட்புறவை கோடிட்டுக் காட்டும் வகையில், அண்மையில் இலங்கையில்
ஏற்பட்ட பொருளாதார சவால்களின் போது சீனாவின் வழங்கிய குறிப்பிடத்தக்க உதவிகளை அவர்
மேலும் பாராட்டினார்.
கௌரவ (வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் பாராளுமன்ற சபாநாயகராக
நியமிக்கப்பட்டமை குறித்து கௌரவ குயின் போயோங் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நோக்கங்களை
அடைவதில் சீனாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், பரஸ்பர
அபிவிருத்தி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை
வலுப்படுத்துவதன் சீனாவின் தயார்நிலையையும் அவர் வலியுறுத்தினார்.
பிரதி சபாநாயகர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரிஸ்வி சாலி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்
அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி
ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன,
இலங்கைக்கான சீன தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

COMMENTS

Wordpress (0)