பெரஹெரவில் யானை ஒன்று திடீர் குழப்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
காலி, தொடந்துவ மொரகொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இன்று (28) இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தின் போது யானை ஒன்று குழப்பம் விளைவித்துள்ளது.
இந்நிலையில், ஊர்வலத்தில் சென்ற நபரை யானை தாக்கியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.