வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 17ம் திகதி சமர்ப்பிப்பு

வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 17ம் திகதி சமர்ப்பிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் பெப்ரவரி 18ம் திகதி முதல் மார்ச் 21ம் திகதி வரை 26 நாட்கள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 04 சனிக்கிழமைகள் உட்பட நடைபெறவுள்ளது.

மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு மார்ச் 21 அன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

COMMENTS

Wordpress (0)