2025 இருந்து 2024க்கு சென்ற காலப்பயணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
2025 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒரு விமானம் பற்றிய செய்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2025-ம் ஆண்டு தொடங்கிய பிறகு, ஹாங்காங்கில் இருந்து பயணிக்கத் தொடங்கிய கேத்தே பசிபிக் விமானம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடைந்தபோது புத்தாண்டு பிறக்கவில்லை.
அதன்படி, இந்த விமானம் எதிர்காலத்தில் இருந்து வந்த காலப்பயணம் என்று பலரால் அழைக்கப்பட்டது.
இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் தங்களது பயணத்தின் இடையே சர்வதேச திகதிக் கோட்டை (IDL) கடந்ததால் இரண்டு முறை புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது.
சர்வதேச திகதிக் கோடு (IDL) என்பது பசிபிக் பெருங்கடலின் குறுக்கே வரையப்பட்ட ஒரு கற்பனைக் கோடு என்பதுடன், இது இரண்டு தொடர்ச்சியான நாட்காட்டி நாட்களைக் குறிக்கிறது.
அதாவது, சர்வதேச திகதிக் கோட்டின் குறுக்கே கிழக்கு நோக்கிப் பயணிக்கும் எவரும் காலப்போக்கில் ஒரு நாள் பின்னோக்கிப் பயணிக்கிறார்கள், மேலும் மேற்கு நோக்கிப் பயணிக்கும் எவரும் ஒரு நாள் முன்னோக்கிப் பயணிக்கிறார்கள்.
எனவே, இந்த பயணிகள் ஜனவரி 1, 2025 அன்று அதிகாலையில் ஹாங்காங்கிலிருந்து புறப்பட்டு, டிசம்பர் 31, 2024 மாலை லொஸ் ஏஞ்சல்ஸை சென்றடைந்தனர்.