நாமல் குமாரவுக்கு விளக்கமறியல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
சமூக செயற்பாட்டாளரான நாமல் குமாரவை ஜனவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (01) பிற்பகல் நாமல் குமார கைது செய்யப்பட்டார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்தியங பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார இன்று (1) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.