முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்.
அவர் இறக்கும் போது அவருக்கு வயது 71. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.