உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை!

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அயலவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 2 சரீரப் பிணையில் உதயங்க வீரதுங்கவை விடுவிக்க நுகேகொட நீதிவான் இன்று (17) உத்தரவிட்டார்.

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஜனவரி 10 ஆம் திகதி, அண்டை வீட்டாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.