
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி இவர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், இன்று (28) நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்காக ஒரு புதிய அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இந்தப் புதிய அலுவலகத்திலிருந்தே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும், அலுவலக திறப்பு விழா பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.