இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ராஜினாமா

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேனவை அத தெரண தொடர்பு கொண்டு வினவிய போது, ​​ரமல் சிறிவர்தனவின் ராஜினாமா கடிதம் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்த இரண்டாவது நபர் ரமல் சிறிவர்தன என்று தெரிவிக்கப்படுகிறது.