ரணில் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்!

ரணில் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (30) பிற்பகல் விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கலந்துரையாடலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்திருந்ததாக பங்கேற்றிருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதன்போது கலந்துக்கொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.