![பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2025/02/1738809739-murder-2.jpg)
பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கணவர் வீடு திரும்பி மனைவியைச் தேடிய போது, அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நேற்று அதிகாலை வாழைச்சேனை, ஓமடியாமடு பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் பலியானவர் திருப்பழுகாமம் பகுதியைச் சேர்ந்த 63 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு உறவினர்களுக்கு இடையேயான பழைய தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து, ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக் கொண்ட போது, தகராறைத் தீர்க்க முயன்ற ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்