ஹிருணிகாவிற்கு பிடியாணை

ஹிருணிகாவிற்கு பிடியாணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேகநபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இந்த முறைப்பாட்டில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 11 சந்தேகநபர்கள் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக முறைப்பாட்டை பதிவு செய்த கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி,  சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் முன்னேற்றம் குறித்து ஜூன் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர், ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்ததார்

COMMENTS

Wordpress (0)