தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை

தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற  தீ வைப்பு சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது.

நேற்று (9) முதல் லெஜன்ஸ் கிரிக்கெட் 7 என்ற பெயரில் கடின பந்து சுற்றுக்போட்டியை நடாத்தும் லெஜன்ஸ்   விளையாட்டு கழகத்திற்கு சொந்தமான மைதான ஆடுகள விரிப்பு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக லெஜன்ஸ் கழகம் சார்பாக அதன் செயலாளரினால் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸாரும் அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவினரும் ( SOCO) வரைவழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எரியூட்டப்பட்ட மைதான ஆடுகள விரிப்பின்  பெறுமதி 120,000 ரூபா  என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது மைதானத்தில் கடமையாற்றும் காவலாளி கடமையில் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதே போன்ற சம்பவம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

COMMENTS

Wordpress (0)