இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (16) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.